Guinea என்ற ஆபிரிக்க நாட்டு அரசியல்வாதிகளுக்கு $8.5 மில்லியன் இலஞ்சம் வழங்கிய குற்றத்துக்காக Beny Steinmetz என்ற இஸ்ரேல் வர்த்தகருக்கு ஜெனீவா இன்று வெள்ளிக்கிழமை 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன் இவர் ஜெனீவாவுக்கு $56 மில்லியன் தண்டமும் செலுத்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இவருக்கு பிராஸ்சின் குடியுரிமையும் உண்டு.
சுவிஸ் நாட்டு சட்டத்தை மீறியதாலேயே மேற்படி வழக்கு சுவிஸில் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது. இது Guinea சட்டத்தை மீறியதற்கான வழக்கு அல்ல.
2006ம் ஆண்டில் Beny Steinmetz Resources Group (BSGR) என்ற தனது நிறுவனத்துக்கு Guinea நாட்டில் உள்ள Simandou என்ற இடத்தில் இரும்பு கனிய (ore) அகழ்வு உரிமையை பெற Beny Steinmetz மேற்படி இலஞ்சத்தை வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த உரிமை முன்னர் Rio Tinto என்ற நிறுவனத்தின் கைகளில் இருந்தது.
அக்காலத்தில் Guinea சனாதிபதியாக இருந்த Lansana Conte என்பவரின் மனைவியான Mamadie Toure யிடமே இலஞ்சம் வழங்கப்பட்டு இருந்தது. Lansana 2008ம் ஆண்டு மரணித்த நிலையில், அவரின் மனைவி தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
சில ஆண்டுகளின் பின் Beny Steinmetz தனது உரிமையை Vale என்ற நிறுவனத்துக்கு $2.5 பில்லியன் பெறுமதிக்கு விற்பனை செய்திருந்தார்.