ரம்ப் ஆட்சியில் வெளியுறவு செயலாளராக ஆக கடமையாற்றிய Mike Pompeo உட்பட மொத்தம் 28 பேர் மீது சீன தடை விதித்து உள்ளது. இந்த தடை காரணமாக 28 பேரும் சீனா, ஹாங் காங், மக்கா (Macao) ஆகிய இடங்களுக்கு பயணிக்க முடியாது. அத்துடன் இவர்களுடன் தொடர்பு கொண்ட வர்த்தகங்கள் சீனா, ஹாங் காங், மக்கா ஆகிய இடங்களில் செயற்படவும் முடியாது.
ரம்பின் Health and Human Services செயலாளர் Alex Azar, வர்த்தக ஆலோசகர் Peter Navarro, தேசிய பாதுகாப்பு செயலாளர் Robert O’Brien, அமெரிக்காவுக்கான ஐ. நா. தூதுவர் Kelly Craft, உதவி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Matthew Pottinger, முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் John Bolton, chief strategist Steve Bannon ஆகியோரும் 28 பேருள் அடங்குவர்.
ரம்ப் காலத்தில் இவர்களே அதிகம் சீன எதிர்ப்பு வசை பாடியிருந்தார். இவர்கள் மீதான தடைகள் பைடென் பதவி ஏற்று சில நிமிடங்களில், அதாவது ரம்ப் பதவியை இழந்து சில நிமிடங்களில், நடைமுறைக்கு வந்திருந்தன. அதனால் இந்த தடை திட்டம் ஏற்கனவே தயார் நிலையில் இருந்துள்ளமை தெரிகிறது.
கடந்த ஜூலை மாதம் உட்பட பல தடவைகள் ரம்ப் ஆட்சி பல இடைநிலை சீன அதிகாரிகள் மீது தடைகள் விதித்து இருந்தது.