ஒபாமா காலத்து உதவி சனாதிபதி ஜோ பைடென் (Joe Biden) இன்று புதன்கிழமை (2021/01/20) அமெரிக்காவின் 46 ஆவது சனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். உள்ளூர் நேரப்படி மதியம் 12:00 மணியளவில் இந்த பதவியேற்பு நிகழ்ந்தது.
பதவி ஏற்பு நிகழ்வில் ரம்பின் உதவி சனாதிபதி Mike Pence, முன்னாள் ஜனாதிபதிகள் ஒபாமா, கிளின்டன், புஷ் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர். வரலாற்றில் முதல் தடவையாக வெளியேறும் சனாதிபதி ரம்ப் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
கரோனா காரணமாக மக்கள் பங்கொள்ள முடியாத நிலையில் சுமார் 200,000 அமெரிக்க கொடிகள் National Mall என்ற மக்கள் கூடுமிடத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
சனாதிபதி ஆகிய தனது முதல் மணித்தியாலத்துள் பைடேன் அமெரிக்காவை மீண்டும் WHO அமைப்பிலும், Paris Climate accord இலும் மீண்டும் இணைக்கிறார். இவற்றில் இருந்து ரம்ப் வெளியேறி இருந்தார். கனடாவுக்கு நன்மை தரவல்ல Keystone XL pipeline என்ற எண்ணெய் காவும் குழாய் திட்டத்தையும் சூழ மாசடைதல் காரணமாக பைடென் நிறுத்துகிறார். இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருவோர் மீது ரம்ப் நடைமுறை செய்த தடைகளையும் நிறுத்துகிறார் பைடென்.
மதியம் 12:00 மணிக்கு அமெரிக்காவின் அணுவாயுத code ரம்பிடம் இருந்து பைடென் கைக்கு மாறியது.
நிகழ்வில் பங்குகொள்ள மறுத்த ரம்ப் Florida மாநிலம் சென்றுள்ளார். அங்கு உள்ள அவரின் வதிவிடத்தில் அவர் தங்குவார்.