இந்தோனேசியாவின் சுலவெசி (Sulawesi) தீவில் வெள்ளிக்கிழமை சாமத்தில் இடம்பெற்ற 6.2 அளவிலான நிலநடுக்கத்துக்கு தற்போதைய கணிப்புப்படி குறைந்தது 42 பேர் பலியாகியும், சுமார் 650 பேர் காயமடைந்து உள்ளனர்.
பலர் தற்போதும் இடிபாடுகளுள் முடங்கி உள்ளனர்.ஒரு இடத்தில் உள்ள 8 கட்டடங்களுள் மட்டும் சுமார் 20 பேர் அகப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் கனரக வாகனங்களின் உதவியுடன் இடம்பெறுகின்றன.
நிலநடுக்கம் சில இடங்களில் பாரிய மண் சரிவுகளையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த சரிவுகளுக்கும் பலர் பலியாகி உள்ளனர். சில பாலங்களும் உடைந்து வீழ்ந்துள்ளன.
நிலநடுக்கத்தின் மையம் அந்த மாநிலத்து Mamuju பகுதியில் இருந்து 36 km தெற்கு, 18 km ஆழத்தில் அமைத்துள்ளது என்கிறது அமெரிக்காவின் Geological Survey.
வியாழக்கிழமையும் இங்கு 5.9 அளவிலான நிலநடுக்கம் நிகழ்ந்து இருந்தது.