பைடென் பதவியேற்பை தடுக்க ரம்பின் ஆயுத ஆதரவாளர்?

அமெரிக்காவில் வரும் 20ம் திகதி பைடென் சனாதிபதியாக பதவி ஏற்பதை (inauguration) தடுக்க ஆயுதம் தரித்த ரம்பின் ஆதரவாளர் 50 மாநில Capitol நிலையங்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள மத்திய அரசின் Capitol எங்கும் ஆர்பாட்டங்களில் ஈடுபட உள்ளதாக அமெரிக்க மத்திய போலீஸ் அமைப்பான FBI க்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அமெரிக்காவில் சட்டப்படி தனிநபர் ஆயுதங்களை கொண்டிருக்கலாம். மாநிலங்கள் ஒரு நாடாக இணைந்த காலத்தில் இந்த உரிமை அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.

ரம்ப் impeachment மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் ஆதரவாளர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உள்ளதாக FBI அறிந்துள்ளது. அதனால் குறைந்தது 15,000 National Guard படையினர் பாதுகாப்புக்கு அழைக்கப்பட உள்ளனர். ஏற்கனவே சுமார் 6,200 படையினர் வாஷிங்டன் Capitol பகுதியில் காவலில் உள்ளனர்.

ஆனால் ரம்பின் Twitter account தடை செய்யப்பட்டு உள்ளதால் ரம்ப் தனது தொண்டர்களுடன் முன்னர்போல் உடனுக்குடன் தொடர்புகொள்ள முடியாமல் உள்ளது. அது ஆர்ப்பாட்ட வேலைப்பாடுகளுக்கு இடராக உள்ளது.

கடந்த 6ம் திகதி வன்முறைகளில் ஈடுபட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டும் உள்ளனர். அவர்களுள் முன்னாள் இராணுவ அதிகாரிகள், அரசியவாதிகள், சட்டதரணி, விரிவுரையாளர் போன்ற பலரும் உள்ளடங்குவர்.

Washington Monument park பகுதி 11ம் திகதி முதல் 21ம் திகதிவரை மூடப்படும் உள்ளது. இக்காலத்தில் அப்பகுதி வீதிகளும் மூடப்பட்டு இருக்கும்.