இந்தோனேசிய Sriwijaya Air விமான சேவைக்கு சொந்தமான Boeing 737 விமானம் ஒன்று மேலேறி சுமார் 4 நிமிடங்களில் கடலுள் வீழ்ந்து உள்ளது. இந்த விமானம் Jakarta நகரில் இருந்து Pontianak என்ற இடத்துக்கு பயணிக்க இருந்தது.
சில மீனவர் விமானம் வானத்தில் வெடித்தே வீழ்ந்தது என்று கூறியுள்ளனர். இந்த Flight SJ182 இறுதியாக உள்ளூர் நேரப்படி 14:40 மணிக்கு நிலத்துடன் தொடர்புகளை மேற்கொண்ட உள்ளது. இதில் 56 பயணிகளும், 6 பணியாளரும் இருந்துள்ளனர். பயணிகளுள் 7 சிறுவர்களும், 3 குழந்தைகளும் அடங்குவர்.
மேற்படி விமானம் சர்ச்சைக்குரிய புதிய Boeing 737 Max விமானம் அல்ல. இன்று வீழ்ந்த விமானம் சுமார் 26 ஆண்டு பழமையான பழைய வகை 737 வகை என்று கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் வீழ்ந்த இந்தோனேசிய Lion Air விமானம் சர்ச்சைக்குரிய 737 Max வகையானது.