இஸ்ரேல் மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது. இன்று செவ்வாய்க்கிழமை இரவுடன் அந்நாட்டுக்கான தற்போதைய வரவுசெலவு திட்ட காலம் முடிவடைந்தாலும் புதிய வரவுசெலவு திட்டம் நடைமுறைக்கு வராத காரணத்தால் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் நிகழவுள்ளது. அங்கு கடந்த 2 ஆண்டுகளில் இடம்பெறவுள்ள 4 ஆவது தேர்தல் இதுவாகும். புதிய தேர்தல் வரும் மார்ச் மாதம் 23ம் திகதி இடம்பெறும்.
இஸ்ரேலில் வாக்குகள் பிரிந்து உள்ளன. அதனால் எந்தவொரு கட்சியின் திடமான பெரும்பான்மையை பெற முடியாது உள்ளது. அதனால் கூட்டு ஆட்சியே அமைகிறது. கூட்டு ஆட்சிகள் நீண்டகாலம் நிலைப்பது இல்லை.
தற்போதைய இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu மீது ஊழல் வழக்குகளும் தொடரப்பட்டு உள்ளன. ஆனால் அவர் 6ம் தடவை பிரதமராக முனைகிறார். அவரின் பதவிக்காலங்கள் பல இடையில் கவிழ்ந்து இருந்தன.
தற்போதை கூட்டு முதலாம் (Likud கட்சி), மற்றும் இரண்டாம் (Blue and White கட்சி) நிலைகளில் உள்ள கட்சிகளின் கூட்டணியே. இன்றைய பிரிவுக்கு இரண்டு தரப்பும் மற்றைய தரப்பை குற்றம் சாட்டி உள்ளன.
அடுத்த தேர்தலும் நிலையான ஆட்சியை அமைக்கும் என்று திடமாக கூற முடியாது. Likud கட்சியில் இருந்து பிரிந்து Gideon Saar உட்பட சிலர் வேறு கட்சி ஆரம்பித்து உள்ளனர். Blue and White கட்சி பலம் குன்றி உள்ளது.