ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டம் (United Nations Development Program, UNDP) ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் கணிப்பிட்டு வெளியிடும் மனித அபிவிருத்தி சுட்டியிடலில் (HDI, Human Development Index) இலங்கை 72ம் இடத்தை அடைந்துள்ளது. மொத்தம் 189 நாடுகள் இந்த கணிப்புக்கு உள்ளடக்கப்பட்டு இருந்தன.
HDI சுட்டி கணிப்பு 1990ம் ஆண்டு ஆரபிக்கப்பட்டது. இந்த ஆண்டு 30வது அறிக்கை ஆகும்.
கடந்த ஆண்டு 72ம் இடத்தில் இருந்த இலங்கை, ஒருபடி முன்னேறி 71 ஆம் இடத்தை அடைந்துள்ளது.
நோர்வே முதலாம் இடத்திலும், அயர்லாந்து இரண்டாம் இடத்திலும், சுவிற்சலாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன.
ஆசிய நாடுகளில் ஹாங் காங் 4ம் இடத்திலும், சிங்கப்பூர் 11ம் இடத்திலும், தென்கொரியா 23ம் இடத்திலும் உள்ளன.
ஜெர்மனி 6ம் இடத்திலும், பிரித்தானியா 13ம் இடத்திலும், கனடா 16ம் இடத்திலும், அமெரிக்கா 17ம் இடத்திலும், பிரான்ஸ் 26ம் இடத்திலும் உள்ளன.
சீனா 85ம் இடத்திலும், இந்தியா 131ம் இடத்திலும், பாகிஸ்தான் 154ம் இடத்திலும், பங்களாதேசம் 133ம் இடத்திலும் உள்ளன.