பங்களாதேசத்தில்எல்லை காவல்படையினருக்கு அந்நாட்டின் இராணுவத்துக்கு உள்ள சலுகைகள், உரிமைகள் இல்லை. பங்களாதேசத்தின் 4000 km இக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பர்மா எல்லைகளில் காவல் புரியும் இவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து எல்லை காவல் படையினர் 2009 ஆம் ஆண்டில் சிறு புரட்சி ஒன்றை செய்திருந்தனர். இந்த புரட்சி 33 மணித்தியாலங்களே நீடித்தது. இந்த 33 புரட்சியின் முடிவில் 57 உயர் மற்றும் நடுத்தர இராணுவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 74 பெயர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
மொத்தம் 850 பெயர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட வழக்கில் நூற்றுக்கணக்கானோர் 20 வருடம் முதல் ஆயுள் தண்டனைவரை பெற்றுள்ளனர். இறுதியில் 152 பெயர்கள் மரண தண்டனை தீர்ப்பை பெற்றுள்ளனர்.
மரண தண்டனை தீர்ப்பு பெற்றோரின் சட்டத்தரணிகள் முடிவை அப்பீல் செய்யப்போவதாக கூறியுள்ளனர்.