ஈரானின் முதன்மை அணு விஞ்ஞானியான Mohsen Fakhrizadeh இன்று தலைநகர் தெஹிரானுக்கு அண்மையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என்கிறது ஈரானிய செய்தி நிறுவனமான Fars News Agency.
மேற்படி கொலையை அந்நிய அரச பயங்கரவாதம் என்று அழைத்துள்ளார் ஈரானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் Mohammad Javad Zarif.
Fakhrizadeh ஈரானின் இரகசிய அணு ஆயுத தயாரிப்பின் முக்கிய நபர் என்கிறது இஸ்ரேல். 2018 ஆம் ஆண்டு இஸ்ரேலின் பிரதமர் Netanyahu தனது உரை ஒன்றில் Fakhrizadeh வின் பெயரை குறிப்பிட்டு இருந்தார்.
International Atomic Energy Agency யும் இவருடன் உரையாட விரும்பி இருந்தது. ஆனால் ஈரான் அதற்கு மறுத்து வந்துள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலத்தில் 4 ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவின் புதிய சனாதிபதி பைடென் ஒபாமா காலத்தில் ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறை செய்யவுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரம்ப் வெளியேறி, ஈரான் மீது பெரும் தடைகளை விதித்து இருந்தார்.