உலகின் மிக சிறந்த உதைபந்தாட்ட வீரரான டியேகோ மரடோனா (Diego Maradona) இன்று புதன் (2020/11/25) தனது 60 ஆவது வயதில் மாரடைப்புக்கு பலியானார். இவர் captain ஆக இருந்து 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா World Cup உதைபந்தாட்ட வெற்றியை அடைய வழி வகுத்தவர்.
1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவுக்கும், பிரித்தானியாவுக்கு இடையில் இடம்பெற்ற FIFA போட்டியின் 90 நிமிட காலிறுதி (quarterfinal) ஆட்டத்தின்போதான மரடோனாவின் விளையாட்டு தரம் உலக புகழ் பெற்றது.
ஆர்ஜென்டீனாவை உலக புகழின் உச்சிக்கு ஏற்றிய இவருக்காக அங்கு 3 தினங்கள் துக்க தினங்களாக பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
பிற்காலங்களில் போதைக்கு அடிமையாகிய இவரின் உதைபந்தாட்ட வாழ்க்கை பின்னர் மங்க ஆரம்பித்தது. 1983 ஆம் ஆண்டு முதலே இவர் cocaine போன்ற போதைகளுக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் மதுவுக்கும் அடிமையாகி இருந்தார். 2000 ஆம் ஆண்டிலும் இவர் முன் ஒருதடவை மாரடைப்புக்கு ஆளாகி இருந்தார்.
1997 ஆம் ஆண்டு தனது 37 ஆவது வயதில் அவர் உதைபந்தாடத்தில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.