Bankruptcy ஆகும் $30 பில்லியன் வைத்திருந்தவர்

OGX

பிரேசில் நாட்டவரான Eike Batista சில வருங்களின் முன்னர் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர். 2012 ஆம் ஆண்டளவில் இவரின் மொத்த பெறுமதி (market value) சுமார் $30 பில்லியன்.இந்த வருட நடுப்பகுதில் இவரின் பெறுமதி சுமார் $200 மில்லியன். இவாரம் அவரின் நிறுவனம் Bankruptcy ஆகிறது.

எண்ணெய் மற்றும் உலோக அகழ்வுகளில் முன்னணி வகித்த இவரின் நிறுவனம் ஒரு காலத்தில் பிரேசிலிலும் கனடாவிலும் 8 தங்க அகழ்வுகள், 1 சில்வர் அகழ்வு, 3 இரும்பு அகழ்வுகளை கொண்டிருந்தது. அத்துடன் இவரின் நிறுவனம் பல எரிபொருள் அகழ்வுகளிலும் ஈடுபட்டது.

2011 உலகின் 8வது பணக்காராக இருந்த இவரின் செல்வம் விரைவில் அழியத்தொடங்கியது. நாள் ஒன்றுக்கு 750,000 பரல் மசகு எண்ணெய் தயாரிக்கும் என கூறப்பட்ட இவரின் எண்ணெய் தயாரிப்பு பிரிவு 15,000 பரல்களையே தயாரித்தது. உலேக அகழ்வுகளும் இவ்வாறு மந்தம் அடைய தொடங்கின.

இந்த மாதம் முதலாம் திகதி (Oct 1st) இந்த நிறுவனம் செலுத்தவேண்டிய $45 மில்லியன் கொடுப்பனவை செய்யவில்லை. இப்போது இது bankruptcy பாதுகாப்பை நாடியுள்ளது.