ஐந்து-கண் கண்களை தோண்டுவோம், சீனா எச்சரிக்கை

ஐந்து-கண் கண்களை தோண்டுவோம், சீனா எச்சரிக்கை

சோவியத் காலத்தில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 ஆங்கில நாடுகளும் இணைந்து Five-Eyes என்ற ஒரு கண்காணிப்பு குழுவை உருவாக்கி இருந்தன. அவற்றின் அப்போதைய நோக்கம் சோவியத்தின் நகர்வுகளை, தொடர்புகளை, இராணுவ உண்மைகளை கண்டறிந்து, தம்முள் பகிர்ந்து கொள்வதே.

இன்று வியாழன் அந்த Five-Eyes நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் ஹாங் காங்கின் பிரிவினை நோக்கம் கொண்ட கட்சியின் ஹாங் காங் அவை உறுப்பினர்கள் 4 பேரை சீனா தடை செய்தது தவறு என்றும், அந்த தடையை உடனடியாக நீக்கும்படியும் கூறி இருந்தனர். அதனால் விசனம் கொண்ட சீனாவே உடனே Five-Eyes நாடுகளை திருப்பி தாக்கியுள்ளது.

சீனாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian ஐந்து-கண் நாடுகளும் தமது கண்கள் தோண்டப்பட்டு இருப்பார்கள் (having their eyes pocked out) என்று கூறியுள்ளார்.

மேற்படி 4 பிரிவினைவாத உறுப்பினர்களும் தடை செய்யப்பட்ட பின், அவர்களின் ஆதவு கொண்ட மேலும் 15 பேர் தமது பதவிகளை விட்டு விலகி இருந்தனர்.