சோவியத் காலத்தின் பின் ஆபிரிக்காவில் ரஷ்ய தளம்

சோவியத் காலத்தின் பின் ஆபிரிக்காவில் ரஷ்ய தளம்

சோவியத் காலத்துக்கு பின்னர் ரஷ்யா தனது முதலாவது கடற்படை தளத்தை சூடானில் (Sudan) அமைக்க உள்ளது. சூடான் செங்கடலோரம் இருப்பதால், இந்த தளம் ரஷ்யாவுக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு இரண்டுக்கும் பொதுவான தளமாக அமையும்.

இந்த தளத்துக்கான உரிமை 25 ஆண்டு கால ஒப்பந்தமாகும். அதை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்க வசதியும் உண்டு. இந்த தளம் ரஷ்ய சட்டங்களுக்கு அமையவே செயற்படும், சூடான் சட்டங்களுக்கு அமைய அல்ல..

இந்த தளத்துக்கு வரும் ரஷ்யர்களை சூடான் தடையின்றி அனுமதிக்கும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இணக்கப்படி இங்கு ரஷ்யா அணு ஆயுதங்கள் உட்பட எந்தவிதமான ஆயுதங்களையும் எடுத்துவர முடியும்.

ஏற்கனவே அருகில் உள்ள நாடான Djibouti யில் அமெரிக்காவும், சீனாவும் தமது தளங்களை கொண்டுள்ளன. ரஷ்யாவும் அங்கு தளம் அமைக்க முதலில் முனைந்து இருந்தது. பின்னர் அந்த பேச்சுக்கள் முறிந்து இருந்தன.