நியூசிலாந்துக்கு அமெரிக்க செல்வந்தர் படையெடுப்பு?

நியூசிலாந்துக்கு அமெரிக்க செல்வந்தர் படையெடுப்பு?

வழமைக்கு மாறாக அதிக அளவு செல்வந்த அமெரிக்கர் நியூசிலாந்துக்கு நகர முயல்வதாக தரவுகள் கூறுகின்றன. அமெரிக்கா கரோனாவை முறைப்படி கட்டுப்படுத்தாமை, அங்கு போலீசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்காவின் எதிர்கால பொருளாதார நிலைமை ஆகியனவே சில அமெரிக்கரின் இந்த நகர்வு முயற்சிக்கு காரணம் என்று கருதப்படுகிறது.

சுமார் $2 மில்லியன் முதலீடு செய்வோர்க்கு நியூசிலாந்து investor (golden) visa வழங்கி வருகிறது. வழமையாக செல்வந்த சீனர்கள் இந்த விசாவில் அதிகம் நாட்டம் கொண்டடிருந்தனர். கடந்த வருடம் 43% golden விசாக்கள் சீனருக்கு சென்றிருந்தன. அதேவேளை 3% golden விசாக்கள் மட்டுமே அமெரிக்கரால் பெறப்பட்டு இருந்தன.

ஆனால் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரையான காலத்தில் அமெரிக்கரின் விண்ணப்பங்களின் தொகை சுமார் 50% ஆக உயர்ந்துள்ளது. அதனால் சீனரின் விண்ணப்ப அளவு சுமார் 25.4% ஆக குறைந்துள்ளது.

நியூசிலாந்து Golen விசா பெறுவோருக்கு பின்னர் நிரந்தர வதிவுரிமையும் வழங்கப்படலாம்.

சீனாவில் கரோனா கணிசமான அளவில் கட்டுப்பாட்டுள் உள்ளமையாலும், அங்கு பொருளாதரம் மீண்டும் வலு அடைவதாலும் சீனர் சீனாவே தற்போதைக்கு பாதுகாப்பான இடம் என்று கருதி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்து இருப்பதும் நியூசிலாந்தில் சீன விண்ணப்பங்கள் குறைய காரணமாகலாம் என்றும் கருதப்படுகிறது

அமெரிக்காவின் Internal Revenue Service தவுகளின்படி 2019 ஆம் ஆண்டின் 12 மாதங்களில் 2,072 பேரே அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மட்டும் 5,816 பேர் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு உள்ளனர்.