நவம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் தோல்வியை அடைந்த அமெரிக்க சனாதிபதி ரம்ப் அப்பதவியை பைடெனிடம் (Biden) கையளிக்கும் பணிகளை தடுத்து வருகிறார். மிக சிறுதொகை வாக்குகள் மட்டுமே எண்ணப்பட உள்ள நிலையில் அதையே ரம்ப் காரணமாக்கியுள்ளார்.
ரம்ப் போதிய electoral வாக்குகளை பெற சந்தர்ப்பம் இல்லை என்றாலும், அனைத்து வாக்குகளையும் எண்ணிய பின்னரே மாநிலங்கள் சட்டப்படியான தொகைகளை கூறும். அதற்கு மேலும் சில காலம் தேவை. அமெரிக்காவில் தேர்தல் பணிகள் மாநிலங்களின் பணி.
ரம்ப் ஆட்சியை சனநாயக முறைப்படி கையளிக்க எதிர்ப்பதை அவமானம் (“an embarrassment) என்று கூறியுள்ளார் பைடென்.
ரம்ப் தரப்பு பல மாநிலங்களில் வாக்கெடுப்பு தொடர்பாக பல வழக்குகளை தொடுத்து இருந்தாலும், அவற்றுள் சில ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்காவில் சனாதிபதி பணி ஒருவர் கையில் இருந்து இன்னொருவர் கைக்கு மாறும்போது (transition) பல விபரங்கள் முறைப்படி கைமாறல் அவசியம். குறிப்பாக தேசிய பாதுகாப்பு உண்மைகள், தரவுகள் உடனடியாக கைமாறல் அவசியம். புதிதாக சனாதிபதி ஆட்சிக்கு வருபவர் மறுகணமே தீர்மானங்களை எடுக்க மேற்படி தவுகள் அவசியம்.
அதேவேளை ரம்பின் வெளியுறவு செயலாளர் Mike Pompeo இன்று செவ்வாய்க்கிழமை ரம்பின் இரண்டாம் ஆட்சி தொடரும் (there will be a smooth transition to a second Trump administration) என்றுள்ளார்.
அமெரிக்காவின் General Services Administration அதிகாரியான Emily Murphy என்பவர் ஆட்சி கைமாறல் செலவுகளுக்கான $10 மில்லியன் பணத்தை தடுத்து வைத்துள்ளார். கைமாறல் பணிகளில் ஈடுபடுவோர்க்கு ஊதியம் செலுத்தவே இந்த பணம் பயன்படும். Emily ரம்பினாலே அப்பதிவில் 2017 ஆம் ஆண்டு அமர்த்தப்பட்டவர்
ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை ரம்பே சட்டப்படி சனாதிபதி.