பாணந்துறையில் நூற்றுக்கணக்கான திமிலங்கைகள் தவிப்பு

பாணந்துறையில் நூற்றுக்கணக்கான திமிலங்கைகள் தவிப்பு

சுமார் 100 திமிங்கிலங்கள் (pilot whales) பாணந்துறை கடற்கரையில் ஒதுங்கி, தாமாக மீண்டும் ஆழ்கடலுள் செல்ல முடியாது தவிக்கின்றன. கரோனா காரணமாக அங்கு நடைமுறையில் உள்ள 24 மணி நேர ஊரடங்கு சட்டத்தையும் மீறி உள்ளூர் மக்கள் அந்த திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடல் செல்ல உதவுகின்றனர்.

தவிக்கும் திமிங்கிலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்குள் செல்லவில்லை என்றால், அவை மரணிக்க நேரிடும். இலங்கையின் Marine Environment Protection Authority (MEPA) இவற்றை ஆழ்கடல் நகர்த்த முனைகின்றது.

Pilot திமிங்கிலம் சுமார் 6 மீட்டர் (20 அடி) நீளம் வரை வளரும். இவை கூட்டமாக (pod) திரியும். ஏன் இவ்வாறு pilot திமிங்கிலங்கள் கரையை அடைகின்றன என்பதை அறியமுடியாது தவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

கடந்த மாதம் சுமார் 470 pilot திமிங்கிலங்கள் அஸ்ரேலியாவின் தெற்கே உள்ள ராஸ்மேனியா (Tasmania) கடலோரம் இவ்வாறு கரை ஒதுங்கி இருந்தன. அவற்றில் சுமார் 110 மக்களின் உதவியினால் மீண்டும் ஆழ்கடல் சென்றன. மிகுதி 360 திமிங்கிலங்களும் பலியாகின.