இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை, தாய்வான் காரணம்

இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை, தாய்வான் காரணம்

அண்மையில் 20 இந்திய படையினர் இந்திய-சீன எல்லையில் கொலை செய்யப்பட்ட காலத்தில் இருந்து இந்தியாவில் சீன எதிர்ப்பு வளர்ந்துள்ளது. மக்கள் கொண்ட அந்த விசனத்தை தனது அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்தும் நோக்கில் சில பா. ஜ. அரசியவாதிகள் இந்தியா தாய்வானுடன் நேரடி வர்த்தக உடன்படிக்கைகளை (trade accords) மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

தாய்வானுடன் மற்றைய நாடுகள் வர்த்தகம் செய்வதை சீனா தடை செய்யாவிடினும், மற்றைய நாட்டு அரசுகள் அரசுமட்ட வர்த்தக உடன்படிக்கைகளை தாய்வானுடன் செய்வதை சீனா எதிர்த்து வந்துள்ளது. தாய்வானை சீனாவின் அங்கம் என்று கூறுகிறது சீனா. தாய்வான் ஐ.நா. வில் அங்கம் கொண்ட நாடு அல்ல. இந்தியாவும் தாய்வானை ஒரு நாடாக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

சீனா தனது வெறுப்பை நேரடியாக வெளியிடாது, மறைமுகமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி பத்திகையான Global Times மூலமே வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியா சீனாவின் உள்நாட்டு விசயத்தில் தலையிட்டால், சீன மீண்டும் நாகலாந்து, அசாம் பிரிவினைவாதிகளுக்கு உதவ நேரிடும் என்று மறைமுகமாக கூறப்பட்டு உள்ளது. Cold-War நின்றபின், சீனா மேற்படி குழுக்களை ஓரளவு கட்டுப்பாட்டுள் வைத்துள்ளது.

ஆனாலும் பெரும் தொகை ULFA (United Liberation Front of Assam) மற்றும் NSCN-K (National Socialist Council of Nagaland – Khaplang பிரிவு) உறுப்பினர் எல்லையோர சீன பகுதியில் முகாம் இட்டு செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இந்தியாவின் நாகலாந்து, மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் ஆதரவு உண்டு. சிலருக்கு பர்மாவிலும் தொடர்புகள் உண்டு.

அண்மையில் டில்லியில் உள்ள சீன தூதரகம் முன் அப்பகுதி ப.ஜ. கட்சி உறுப்பினரான Pal Singh Bagga “Taiwan, Happy National Day” என்ற பதாகை ஒன்றை வைத்திருந்தார்.