CANADA DRY உலக அளவில் பிரபலமான குளிர்பானம். அதன் ஒரு வகை Ginger Ale ஆகும். அந்த Ginger Ale போத்தல்களில் Made from Real Ginger (அசல் இஞ்சி கொண்டு தயாரிக்கப்பட்டது) என்ற விளம்பர வசனமும் உண்டு. ஆனால் அதில் பதியப்பட்டு உள்ள உள்ளடக்கத்தில் இஞ்சி என்ற சொல் இல்லை. காரணம் உண்மையில் அதில் இஞ்சி துளியும் இல்லை. இஞ்சி தரும் நலன்களும் இல்லை.
தவறை அறிந்த அமெரிக்க அரசு 2019 ஆண்டு அங்கு விற்பனை செய்யப்படும் CANADA DRY தயாரிப்பில்இருந்து Made from Real Ginger என்ற வசனத்தை நீக்குமாறு பணித்தது. ஆனால் கனடாவில் Made from Real Ginger என்ற வசனம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வந்தது
பின்னர் Victor Cardoso என்பவர் கனடாவின் CANADA DRY மீது நட்டஈடு வழக்கு தொடர்ந்தார். தான் அதில் உண்மையில் இஞ்சி இருப்பதாக நம்பியே கொள்வனவு செய்ததாக முறையிட்டார். உண்மையை அறிந்த British Columbia மாகாண நீதிமன்றம் CANADA DRY நிறுவனத்துக்கு எதிராக $200,000 தீர்ப்பு விதித்து உள்ளது. ஆனாலும் Made from Real Ginger என்ற வசனம் பயன்படுத்துவதை கனடாவின் நீதிமன்றம் தடை செய்யவில்லை.
CANADA DRY 1904 ஆம் ஆண்டு Ontario மாநிலத்தில் கனடியார் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இதன் உரிமை பல கைகள் மாறி உள்ளன. ஆரம்பத்தில் இப்பாணம் குறைந்த இனிப்பை (sugar) கொண்டிருந்ததாலேயே DRY என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்காலங்களில் அதில் மிகையான இனிப்பு உண்டு.