மலேசிய மக்களின் பொதுப்பணத்தில் ஆரம்பிப்பட்ட 1MDB முதலீட்டு திட்டத்தில் இருந்து மலேசிய அரசியல்வாதிகள் பெருமளவு பணம் கொள்ளையடிக்க உடந்தையாக இருந்த அமெரிக்காவின் முதலீட்டு வங்கியான Goldman Sachs தனது தவறுகளில் இருந்து விடுவிக்க சுமார் $3 பில்லியன் தண்டம் செலுத்த இன்று வியாழன் இணங்கி உள்ளது. அதனால் Goldman செலுத்தும் மொத்த தண்டம் சுமார் $7 பில்லியன் ஆக அதிகரித்து உள்ளது.
கடந்த ஜூலை மாதம் மலேசியாவுக்கும் சுமார் $3.9 பில்லியன் தண்டம் செலுத்த Goldman இணங்கி இருந்தது. பிரித்தானியா ($126 மில்லியன்), சிங்கப்பூர் ($122 மில்லியன்), ஹாங் காங் ($350 மில்லியன்) அரசுகளுக்கும் மேற்படி ஊழல் காரணமாக Goldman தண்டம் செலுத்துகிறது.
முன்னாள் மலேசிய பிரதமர் Najib Razak காலத்தில் 1MDB திட்டத்துக்கு $6.5 பில்லியன் பெறுமதியான மூன்று bond வழங்கலை கையாளும் பணிக்கு அமெரிக்காவின் Goldman Sachs அமர்த்தப்பட்டு இருந்தது. இந்த நடவடிக்கைகள் 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் இடம்பெற்று இருந்தன.
திருடப்பட்ட பணம் முன்னாள் பிரதமர் Najib Razak குடும்பத்துக்கே சென்றதாக கூறப்படுகிறது. Najib Razak, அவரது மனைவி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓட முனைந்த வேளை கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பில் உள்ளனர்.