Amnesty இந்தியாவில் இருந்து வெளியேற்றம் 

Amnesty இந்தியாவில் இருந்து வெளியேற்றம் 

Amnesty International என்ற மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது. இந்திய அரசு தம் மீது திணிக்கும் அழுத்தங்கள் காரணமாகவே தாம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக கூறுகிறது Amnesty. Amnesty இந்த அறிவிப்பை இன்று செவ்வாய் வெளியிட்டு உள்ளது.

தமது வங்கி கணக்குகளை இந்திய விசாரணையாளர் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி முடக்கி உள்ளனர் என்றும் Amnesty கூறியுள்ளது. தம்மை பண கடத்தலில் ஈடுபடுவதாக இந்திய அரசு குற்றம் சுமத்துகிறது என்கிறது Amnesty.

இந்திய இஸ்லாமியர், காஷ்மீர் மக்கள் மீதான ப. ஜ. கட்சியின் இந்துவாத வன்முறைகளை Amnesty விசாரணை செய்வதை இந்திய அரசு விரும்பவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்கியில் போலீசார் இஸ்லாமியரின் மனித உரிமைகளை மீறி இருந்தனர் என்று Amnesty ஆவணப்படுத்தியதால் மோதி அரசு கோபம் கொண்டிருந்தது. காஷ்மீரிலும் இந்திய அரசு மனித உரிமைகளை மீறி இருந்ததாக Amnesty அறிக்கை வெயிட்டு இருந்தது. அமெரிக்காவின் காங்கிரசிலும் Amnesty இந்தியாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறலை விபரித்து இருந்தது.

Amnesty அமைப்புக்கு நன்கொடை வழங்கும் இந்தியர்களையும் இந்திய அரசு நெருக்கிறது என்கிறது Amnesty.

2009 ஆம் ஆண்டிலும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில்,  Amnesty தனது நடவடிக்கைகளை அரசின் நெருக்குதல்கள் காரணமாக இந்தியாவில் நிறுத்தி இருந்தது.