ஒருகாலத்தில் billionaire ஆக இருந்த இந்தியாவின் அனில் அம்பானி சீனாவின் 3 வங்கிகளிடம் $700 மில்லியன் கடனை பெற்று இருந்தார். பிற்காலத்தில் தனது முதலீடுகள் எல்லாம் அழிய, அனில் அம்பானி bankruptcy அடைந்து இருந்தார்.
இந்தியாவில் இவர் Ericsson என்ற தொழிநுட்ப நிறுவனத்தின் $76.8 மில்லியன் கடன் காரணமாக சிறை செல்ல இருந்த வேளையில் $89 பில்லியன் சொத்துக்களை கொண்ட அண்ணன் முகேஷ் அம்பானி தனது பணத்தில் அனிலை காப்பாற்றி இருந்தார். அண்ணன் முகேஷ் தற்போது இந்தியாவின் முதல் பணக்காரர்.
தமது பணத்தை மீள பெற அனில் மீது சீன வங்கிகள் லண்டன் நீதிமன்றம் மூலம் வழக்கை தொடர்கின்றன. Bankruptcy விசாரணையின்போது தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்ற நீதிமன்றில் கூறிய அனில் எவ்வாறு ஆடம்பர (“lavish lifestyle”) வாழ்க்கையை தொடர்கிறார் என்று லண்டன் நீதிமன்றம் தற்போது கேள்வி எழுப்பி உள்ளது.
Bangruptcy க்கு முன் அனில் தனது சொத்துக்களின் உரிமைகளை குடும்பத்தின் மற்றைய உறவினர்களுக்கு மாற்றி இருந்தார். இவரின் விலை உயர்ந்த ஓவியங்கள் இவரின் மனைவியின் பெயருக்கு மாற்றப்பட்டு உள்ளன. இவரின் விலை உயர்ந்த படகு (yacht) இன்னோர் குடும்ப உறவினர் பெயரில் உள்ளது.
அண்மையில் அனிலின் தாயார் அனிலின் credit card ஒன்றை பயன்படுத்தி லண்டன் நகரில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் Harrod’s நிறுவனத்தில் கொள்வனவுகள் செய்துள்ளார். அதை வெள்ளிக்கிழமை நீதிமன்றம் விசாரணை செய்துள்ளது.
அனிலுக்கு அவரின் தாயார் Kokilaben Ambani அண்மையில் $66 மில்லியன் கடனும், மகன் $41 மில்லியன் கடனும் வழங்கியமையையும் நீதிமன்றம் விசாரணை செய்துள்ளது.
அனில் அம்பானியின் தனிப்பட்ட உத்ரவாதத்தின் அடிப்படையிலேயே Industrial and Commercial Bank of China, China Development Bank, Export-Import Bank of China ஆகிய சீன வங்கிகள் $700 மில்லியன் கடனை அனிலின் Reliance Communication என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு வழங்கி இருந்தன.
அண்ணன் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட மும்பாய் வீட்டின் பெறுமதி சுமார் $1 பில்லியன் என்று கூறப்படுகிறது. இதில் 600 பணியாளர் உள்ளனர். இதில் 3 ஹெலி இறங்கு தளங்களும், 3 மாடிகளில் பூங்காக்களும் உள்ளன. இவரின் மகளுக்கு அண்மையில் $100 மில்லியன் செலவில் திருமணம் நடைபெற்று இருந்தது.