இலங்கையின் தென்கிழக்கு கடலில் இந்த மாதம் 3 ஆம் திகதி தீ பற்றிக்கொண்ட New Diamond என்ற VLCC (very large crude carrier) கப்பல் அதிகாரி (captain) மீது இலங்கை அரசு வழக்கு தொடரவுள்ளது.
பனாமாவில் Porto Emporios Shipping Inc என்று பதியப்பட்ட, கிரேக்கத்தில் New Shipping Limited என்ற உரிமை நிறுவனத்தை கொண்ட இந்த கப்பல் குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு 270,000 தொன் மசகு எண்ணெய்யை எடுத்து செல்கையில் தீ பற்றி இருந்தது. காவிச்சென்ற மசகு எண்ணெய் பாதுகாக்கப்பட்டாலும், கப்பலின் 1,700 தோன் heavy fuel oil கடலுள் கசிந்து உள்ளதாக இலங்கை கூறுகிறது.
கசிந்த எண்ணெய் பெருமளவில் கடலில் இருந்து துப்பரவு செய்யப்பட்டு உள்ளது. Captain உட்பட இந்த கப்பலின் பணியாளர் 22 பேரும் தற்போது காலி விடுதி ஒன்றில் கடற்படையின் காவலில் உள்ளனர். ஒரு பிலிப்பீன் ஊழியர் மட்டும் தீக்கு பலியாகி இருந்தார்.
மேற்படி ஆபத்தில் இருந்த கப்பலின் தீயை அணைத்து, அதை பாதுகாப்பான நிலைக்கு கொண்டுவந்தமைக்கு இலங்கை $1.88 மில்லியன் (340 மில்லியன் ரூபாய்) தண்டமும் விதித்துள்ளது.
தற்போது 130 km (70 கடல் மைல்) தூரத்தில் ஊள்ள கப்பலை 370 km (200 கடல் மைல்) தூரத்துக்கு அப்பால் இழுத்து செல்லும்படியும் இலங்கை பணித்து உள்ளது. இந்த கப்பல் 330 மீட்டர் (1,1000 அடி) நீளம் கொண்டது.