அண்மையில் அருணாசல் (Arunachal Predesh) மாநிலத்தின் இந்திய-சீன எல்லையோரம் சீனாவால் கைது செய்யப்பட்டிருந்த 5 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு சனிக்கிழமை அறிவித்து உள்ளது. சனிக்கிழமை மதியம் அளவில் இந்திய படையினரிடம் இவர்கள் கையளிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது.
வேட்டைக்கு சென்ற இந்த 5 இந்திய இளைஞர்களும் பாதை தவறியே சீனாவுக்குள் நுழைந்து உள்ளனர் என்று தற்போது இந்தியாவால் கூறப்பட்டுள்ளது.இந்திய அறிக்கை மேற்படி 5 பேரும் “inadvertently strayed across the border while hunting” என்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ரஷ்யாவில் சந்தித்த இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் தம்முள் நிலவும் முறுகல் நிலையை தணிக்க உடன்பட்டு இருந்தன.
இதை தொடர்ந்து இரு தரப்பும் தமது மேலதிக படைகளை எல்லையில் இருந்து உட்பகுதிக்கு நகர்த்தக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
அமெரிக்க சனாதிபதி ரம்ப் இந்திய-சீன முரண்பாடுகளை தீர்க்க முன்வந்து இருந்தாலும், ரஷ்யாவே இரண்டு தரப்புக்கள் மீதும் ஆளுமை கொண்ட நாடாக உள்ளது என்பதை நிரூபித்து உள்ளது.