இந்தியாவும், சீனாவும் தமது எல்லைகளில் நிலவி வரும் முறுகல் நிலையை தணிக்க விரும்புவதாக இன்று கூட்டறிக்கை ஒன்றை ரஷ்யாவில் வெளியிட்டு உள்ளன. ரஷ்யா சென்றிருக்கும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சரும், சீனாவின் வெளியுறவு அமைச்சரும் இந்த அறிக்கையை கூட்டாக வெளியிட்டு உள்ளனர்.
தற்போது எல்லையில் நிலவும் முரண்பாடுகள் இரண்டு பகுதிக்கும் நல்லதல்ல என்று அந்த அறிக்கை கூறியுள்ளது (the current situation in the border area is not in the interest of both sides).
இருதரப்பும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணக்கங்களுக்கு அமைய செயல்படல் அவசியம் என்றும் இரு தரப்பும் கூறியுள்ளனர்.
ஜூன் மாதம் 20 இந்திய படையினரும், அறியப்படாத எண்ணிக்கையிலான சீன படையினரும் எல்லையோர கைகலப்புக்கு பலியாகி இருந்தனர். அதன் பின், பேச்சுவார்த்தைக்கு அழுத்தும் நோக்கில், இரண்டு தரப்பும் மேலதிக படைகளை அங்கு அனுப்பி இருந்தன.