கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் முடிவடைந்த 2002-2021 வர்த்தக ஆண்டின் முதல் காலாண்டு (ஏப்ரல்-மே-ஜூன்) பொருளாதாரம் 23.9% ஆல் வீழ்ந்து உள்ளதாக இந்தியாவின் National Statistical Office கூறியுள்ளது. கடந்த 24 வருடங்களில் இந்தியாவில் இடம்பெறும் மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி இதுவாகும்.
கரோனாவும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றாலும், கரோனாவுக்கு முன்னரே இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்து இருந்தது. ஆனால் இந்திய அரசு அதை மறைந்து வந்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் கள்ள காசை வெளியே கொண்டுவரும் நோக்கில் நடைமுறை செய்த பழைய தாள் அழிப்பு கள்ள காசை வெளியே கொண்டுவருவதற்கு பதிலாக சிறிய பொருளாதாரங்களையே அதிகம் பாதித்தது.
மோதி அரசு $266 பில்லியன் பணத்தை கரோனா பாதிப்பில் இருந்து மீட்க செலவழித்தாலும் பொருளாதாரம் மீட்கப்படவில்லை.
தற்போது கரோனா தொற்றியோர் தொகையில் இந்தியா 3 ஆம் இடத்தில் உள்ளது. அத்தொகை நாளாந்தம் சுமார் 80,000 ஆல் அதிகரிக்கிறது. திங்கள்கிழமை மட்டும் 78,512 பேர் புதிதாக கரோனா தொற்றியோர் பட்டியலில் இணைந்து உள்ளனர்
அமெரிக்காவின் கடந்த காலாண்டு பொருளாதாரம் 9.5% ஆல் வீழ்ந்து இருந்தது. ஜப்பானின் பொருளாதாரம் 7.6% ஆல் வீழ்ந்து இருந்தது.
சீனாவின் காலாண்டு பொருளாதாரம் 3.2% ஆல் வளர்ந்து இருந்தது. அடுத்த காலாண்டு சீனாவின் பொருளாதாரம் 5.4% ஆல் வளரும் என்கிறது HSBC கணிப்பீடு.