மாலியில் இன்று இராணுவ கிளர்ச்சி

மாலியில் இன்று இராணுவ கிளர்ச்சி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் (Mali) இன்று கீழ்மட்ட இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கீழ்மட்ட இராணுவத்தினர் அந்நாட்டின் சனாதிபதி Ibrahim Boubakar Keita என்பவரையும், பிரதமர் Boubou Cisse என்பவரையும் இன்று செவ்வாய் காலை கைது செய்தும் உள்ளனர்.

கூடவே இராணுவ உயர் அதிகாரிகளும் தடுப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் Bamako வில் சில அரச கட்டிடங்கள் தீக்கு இரையாகி உள்ளன. Colonel Sadio Camara என்பவரே இந்த கிளர்ச்சிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

அண்மைக்காலங்களில் Mahmoud Dicko என்ற பிரபல இஸ்லாமிய இமாம் ஊழல் நிறைந்த ஜனாதிபதியை பதவி விலகும்படி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தார். அந்நாட்டின் அரச செய்தி சேவையும் இடைநிறுத்தப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் மேற்படி இராணுவ கவிழ்ப்பு முனைவை கண்டித்து உள்ளது. மாலி ஒரு முன்னாள் பிரென்ச் ஏகாதிபத்திய நாடாகும். African Union னும் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளது.