முன்னர் Abdulla Yameen னின் சீன ஆதரவு கட்சி மாலைதீவில் ஆட்சியில் இருந்தவேளை சீனா Male என்ற மாலத்தீவின் தலைநகருக்கும், மாலைதீவின் பிரதான விமான நிலையத்துக்கும் இடையில் பாலம் ஒன்றை சீனா அமைத்து வழங்கியது. தற்போது அங்கு ஆட்சியில் இருப்பது Ibrahim Solih தலைமையிலான இந்திய ஆதரவு கட்சி. அதனால் இந்தியா Male நகரை மேற்கே உள்ள மேலும் 3 தீவுகளுடன் இணைக்கும் பாலம் ஒன்றை அமைக்கவுள்ளது.
Villingili, Gulhifahu, Thilafushi ஆகிய தீவுகளையே மேற்படி 6.7 km நீளம் கொண்ட பாலம் தலைநகர் Male உடன் இணைக்கவுள்ளது. இந்த பாலத்துக்கு $500 மில்லியன் செலவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா $100 மில்லியன் பணத்தை நன்கொடையாகவும், மிகுதி $400 மில்லியனை கடானவும் வழங்கும்.
Greater Male Connectivity Project என்ற இந்த திட்டத்துக்கான பொருட்கள், மற்றும் சேவைகள் இந்தியாவில் இருந்து பெறப்படும்.
சுமார் 340,000 மக்களை கொண்ட மாலைதீவில் 1,192 தீவுகள் உள்ளன. அவற்றுக்கிடையே பொதுவாக வள்ள போக்குவரத்தே இடம்பெறும். உல்லாசப்பயணிகள் சிறு விமானங்களை பயன்படுத்துவர். சீனா விமான நிலையத்தை பாலம் மூலம் இணைக்க முன், விமான பயணிகள் வள்ளம் மூலமே தலைநகரை அடைந்து இருந்தனர்.