முகம்மதை (Prophet Mohammad) இழிவு செய்து Facebook செய்தி ஒன்றை வெளியிட்ட காரணத்தால் கர்நாடகா மாநிலத்து தலைநகர் பெங்களூரில் கலவரம் மூண்டுள்ளது. புதன்கிழமை இடம்பெற்ற இந்த கலவரத்துக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் போலீஸ் நிலையம் ஒன்று தாக்கப்பட்டும், வாகனங்கள் பல தீயிடப்பட்டும் உள்ளன.
மேற்படி Facebook செய்தியை உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் உறவு பையன் வெளியிட்டு உள்ளார். அவரின் வீடும் தாக்குதலுக்கு உள்ளானது. மேற்படி Facebook செய்தி தற்போது அழிக்கப்பட்டு உள்ளது.
குறைந்தது 110 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டும் உள்ளனர். மரணித்தோருள் 2 பேர் துப்பாக்கி சூட்டு காயம் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் போலீசாரின் சூட்டுக்கு பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 10,000 போலீசார் தற்போது நிலைமையை கட்டுப்பாட்டுள் வைத்துள்ளனர்.
அதேவேளை அவ்வூர் முஸ்லீம்கள் சைவ கோவில் ஒன்றை மனித சங்கிலி மூலம் பாதுகாத்தமை படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் முஸ்லீம்கள் தொகை சுமார் 13%.
வெளிநாடுகளின் தொழில்நுட்ப நிறுவனங்களும், இந்தியாவின் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களும் பெங்களூரிலேயே உள்ளன.