வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் Democratic கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமா ஆட்சியின் உதவி சனாதிபதி ஜோ பைட்டேன் (Joe Biden) கமலா ஹாரிஸ் என்பவரை தனது உதவி சனாதிபதியாக போட்டியிட தெரிவு செய்துள்ளார். நவம்பரில் ஜோ பைடென் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், கமலா ஹாரிஸ் உதவி சனாதிபதி ஆவார்.
ஜோ பைடென் மிகவும் வயது முதிர்ந்தவர் (தற்போது வயது 77) என்றபடியால் அவர் 2024 ஆம் ஆண்டு இரண்டாம் தடவை போட்டியிட முடியாமைக்கு சந்தர்ப்பம் உண்டு. அந்நிலையில் கமலா ஹாரிஸ் சனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம். அதனால் 2024 ஆம் ஆண்டில் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதலாவது பெண் சனாதிபதி ஆகும் வாய்ப்பும் உண்டு.
கமலா ஹாரிஸ் அமெரிக்க உதவி சனாதிபதி போட்டியில் முன்னணி கட்சிகள் சார்பில் பங்குகொள்ளும் 3 ஆவது பெண். 2008 ஆம் ஆண்டில் Sarah Palin உதவி சனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு இருந்தார்.
கலிபோர்னியா மாநிலத்தின் Oakland நகரில் 1964 ஆம் ஆண்டு பிறந்த இவரின் தந்தையார் Jamaica நாட்டில் பிறந்த Standford University விரிவுரையாளர், தாயார் சியாமளா கோபாலன் இந்தியாவில் (தமிழ்நாடு) பிறந்த புற்றுநோய் ஆய்வாளர். கமலாவின் 7 வயதில் பெற்றார் விவாகரத்து செய்து இருந்தனர். கமலாவும், சகோதரியும் சிறுவயதில் சென்னை செல்வது உண்டு.
Howard University யில் BA கற்ற கமலா ஹாரிஸ் 2016 ஆம் ஆண்டுமுதல் ஒரு Senate உறுப்பினர். முதலில் கமலா 2020 சனாதிபதி பதவிக்கு போட்டியிட உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு இருந்தாலும், பின்னர் போதிய ஆதரவு இன்மையால் விலகி ஜோ பைடெனை ஆதரித்து இருந்தார்.