ரம்பை நீதிமன்றம் இழுக்கவுள்ளது TikTok

ரம்பை நீதிமன்றம் இழுக்கவுள்ளது TikTok

அமெரிக்க சனாதிபதி ரம்பை நீதிமன்றம் இழுக்கவுள்ளது சீனாவை தளமாக கொண்ட TikTok என்ற app. TikTok மீது ரம்ப், அமெரிக்காவின் பாதுகாப்பை காரணம் கூறி, தடை செய்ய முயல்வதே TikTok நீதிமன்றை நாட காரணம். TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான ByteDance சீனாவை தளமாக கொண்டது.

மேற்படி வழக்கு செவ்வாக்கிழமை பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ரம்ப் ஆதாரம் எதுவும் இன்றி தனது executive order மூலம் தம்மை தடை செய்வது சட்டத்துக்கு முரண் என்கிறது TikTok.

இந்த வழக்கு Southern District of California பகுதிக்கான U.S. District Court இல் பதிவு செய்யப்படும் என்று செய்திகள் கூறுகின்றன. அப்பகுதியிலேயே அமெரிக்காவின் TikToK பிரிவு செயல்படுகிறது. அங்கு சுமார் 1,000 அமெரிக்கர் கடமையாற்றுகின்றனர்.

கடந்த வியாழன் ரம்ப் செய்துகொண்ட executive order TikTok அடுத்த 45 நாட்களுள் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படவேண்டும். அவ்வாறு விற்பனை செய்யப்படாவிடின் TikTok அமெரிக்காவில் தடை செய்யப்படும். தற்போது அமெரிக்காவில் 100 மில்லியன் பேர் TikTok கை பயன்படுத்துகின்றனர்.

TikTok மட்டுமன்றி, WeChat மீதும் ரம்ப் தடையை நடைமுறை செய்யவுள்ளார். WeChat அமெரிக்காவின் WhatsApp க்கு நிகரானது. உலகம் எங்கும் உள்ள சீனர் WeChat மூலமே தொடர்பு கொள்வர்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி TikTok கின் அமெரிக்க உரிமையை Microsoft கொள்வனவு செய்ய முனைகிறது. TikTok கின் அமெரிக்க பிரிவின் பெறுமதி சுமார் $50 பில்லியன் என்று கணிக்கப்படுகிறது. Twitter, Facebook ஆகிய நிறுவனங்களும் கூடவே TikTok அமெரிக்க பிரிவை கொள்வனவு செய்ய முனைகின்றன.

பொதுவாக பிரபலமான அனைத்து சீன நிறுவனங்கள் மீதும் ரம்ப் தடைகளை விதித்து வருகிறார். ஏற்கனவே Huawei மீதும்,  ZTE மீதும் தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன.