இலங்கையில் தேடப்பட்டுவந்த அங்கொடை லொக்கா (Maddumage Chandana Lasantha Perera alias Angoda Lokka, from Kotikawatta, Colombo) கோயம்புத்தூரில் மரணமாகியதாக கோயம்புத்தூர் போலீசார் ஞாயிறு கூறி உள்ளனர். அங்கு ஒளித்து வாழ்ந்த அங்கொடை லொக்கா ஜூலை மாதம் 3 ஆம் திகதி மாரடைப்பால் மரணமாகியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு
இலங்கையர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கோயம்புத்தூர் போலீசார் கூறி உள்ளனர்.
சிவகாமி சுந்தரி, ஈரோடு தியனேஸ்வரன், இலங்கையரான Amani Thanji ஆகியோரே கைது செய்யப்பட்டு உள்ளனர். அங்கொடை லொக்காவுக்கு Pradeep Singh என்ற பெயரில் பொய் ஆவணங்களை கைது செய்யப்பட்டோர் பெற்றுக்கொடுத்தனர் என்று கூறப்படுகிறது.
ஜூலை 3 ஆம் திகதி அசைவின்றி இருந்த அங்கொடை லொக்காவை Coimbatore Medical College Hospital லுக்கு எடுத்து சென்றனர் என்றும் மறுநாள் அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மரணித்தவரின் post-mortem விபரங்கள் வந்த பின்னரே திடமாக எதையும் கூறமுடியும் என்று கோயம்புத்தூர் போலீசார் தற்போது கூறுகின்றனர்.
அதேவேளை அங்கொடை லொக்கா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு உள்ளதாக கிடைத்தை துப்பை இலங்கை போலீசார் கோயம்புத்தூர் போலீசாருக்கு வழங்கி உள்ளனர். அவரின் மரண நிகழ்வை அவரின் சகோதரி ஒருவர் இணையம் மூலம் பார்த்ததாகவும் இலங்கை போலீசார் கூறுகின்றனர். லொக்காவை அவரின் எதிரிகளே கொலை செய்ததாக இலங்கை போலீசார் நம்புகின்றனர்.
லொக்கா இந்தியாவுக்கு சுமார் 3 ஆண்டுகளின் முன் சென்றதாகவும், அவர் அங்கு வர்த்தகம் ஒன்றில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.