சீனாவின் Huawei தயாரிப்புகளுக்கு பிரித்தானியா தடை

Huawei

சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei யின் தயாரிப்புகளுக்கு பிரித்தானியா முற்றாக தடை விதிக்கிறது. குறிப்பாக Huawei நிறுவனத்தின் 5G தயாரிப்புகளே இந்த தடைக்கு காரணம்.
.
முன்னர் பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத இடங்களில் தனது தயாரிப்புகளை Huawei விற்பனை செய்யலாம் என்று பிரித்தானியா கூறி இருந்தது. ஆனாலும் அமெரிக்க சனாதிபதி ரம்பின் அழுத்தம் காரணமாக தற்போது Huawei பிரித்தானியாவில் முற்றாக தடை செய்யப்படுகிறது.
.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரித்தானியா அமெரிக்காவுடன் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை செய்வதற்கு வசதியாகவே சீனாவின் Huawei போன்ற நிறுவனங்களை களை எடுக்கிறது என்றும் நம்பப்படுகிறது.
.
புதிய சட்டபடி வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின் Huawei தயாரிப்புகளை பிரித்தானிய தொலைபேசி நிறுவனங்கள் கொள்வனவு செய்வது குற்றமாகும். தற்போது பாவனையில் உள்ள Huawei தயாரிப்புகள் 2027 ஆம் ஆண்டுக்கு முன் சேவையில் இருந்து நீக்கப்படவேண்டும்.
.
ஆனால் Huawei தயாரிக்கும் cell phone தொடர்ந்தும் பிரித்தானியாவில் விற்பனை செய்யப்படலாம். பிரித்தானியாவில் Huawei 1,600 ஊழியர்களையும் கொண்டுள்ளது.
.
ரம்பின் நெருக்கடிக்கு மத்தியிலும் Huawei தனது உலக அளவிலான வருமானத்தை அதிகரித்து உள்ளது. 2019 ஆண்டின் முதல் 6 மாத வருமானத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதல் 6 மாத வருமானம் 13.1% ஆல் அதிகரித்து உள்ளது.
.
பிரித்தானியாவின் பின் கனடாவையும் அமெரிக்கா அழுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்ரேலியாவும், நியூசிலாந்து ஏற்கனவே Huawei யின் 5G தயாரிப்புகளை தடை செய்துள்ளன.
.