மயன்மார் மண்சரிவுக்கு 162 பேர் பலி

Jade

மயன்மாரில் (Myanmar) இடம்பெற்ற மண் சரிவுக்கு குறைந்தது 162 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் 54 பேர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டும் உள்ளனர். இந்த சம்பவம் Hpakan என்ற மலைப்பகுதியான இடத்தில் இடம்பெறுள்ளது.
.
உள்ளூர் நேரப்படி வியாழன் பிற்பகல் 7:15 மணியளவில் இந்த சரிவு இடம்பெறுள்ளது. சரிவுக்கு முன் இப்பகுதில் கனத்த மழை பெய்துள்ளது.
.
Jade கற்களை அகழும் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. பலியானோர் அகழ்வை பிரதான தொழிலாக செய்யாதோர். வளர்ந்து வரும் சீனாவில் jade கல்லுக்கு சந்தை வலுவாக இருப்பதால் சாதாரண பொதுமக்களும் jade அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.
.
2017-2018 ஆண்டுகளில் சுமார் $760 மில்லியன் பெறுமதியான jade களை மயன்மார் சீனாவுக்கு விற்பனை செய்திருந்தது. இத்தொகை முன்னைய ஆண்டிலும் 68% அதிகம்.
.
2015 ஆம் ஆண்டு கசின் என்ற jade அகழும் இடத்தில் இடம்பெற்ற சரிவுக்கு 90 பேர் பலியாகி இருந்தனர்.
.