ஹாங் காங் இளையோர் மற்றும் மேற்கு நாடுகள் முன் வைத்த பலமான எதிர்ப்புகள் மத்தியிலும் சீன மத்திய அரசு ஹாங் காங் மீதான தனது புதிய சட்டங்கள் சிலவற்றை செய்வாய்க்கிழமை இரவு 11:00 மணி முதல் நடைமுறை செய்கிறது. புதிதாக நடைமுறை செய்யப்படும் சட்டங்கள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வரையான தண்டனைகளை வழங்க முடியும்.
.
புதிய சட்டப்படி 1) பிரிவினைவாதம் (secession), 2) அரசுக்கு எதிராக செயற்படல் (subversion), 3) பயங்கரவாதம் (terrorism), 4) அந்நியருடன் இணைத்து நாட்டுக்கு எதிராக செயல்படல் (collusion) ஆகியன பாரிய குற்றங்கள் ஆகும்.
.
அத்துடன் பின்வரும் 3 சூழ்நிலைகளில் சீனாவின் மத்திய அரசு நேரடியாக ஹாங் காங் விசயங்களில் தலையிடும்: 1) அந்நியர் தலையீட்டு கொண்ட விசயங்கள், 2) ஹாங் காங் அரசின் கட்டுப்பாட்டை மீறிய விசயங்கள், 3) தேசிய பாதுகாப்புக்கு குந்தகமான விசயங்கள்.
.
புதிய சரத்துகள் ஹாங் காங்கின் Annex III of the Basic Law சட்டத்துள் அடங்கும்.
.
இந்த சட்டத்தை எதிர்த்த அமெரிக்கா சில சீன அதிகாரிகள் மீது தடைகளை விதித்தது. உடனடியாக சீனாவும் சில அமெரிக்க அதிகாரிகள் மீது தடைகளை விதித்தது.
.
கடந்த சில மாதங்களாக ஹாங் காங் இளையோர் சீனாவின் தேசிய கொடியை எரித்து, அமெரிக்க மற்றும் பிரித்தானிய கொடிகளை உயர்த்தி பிடித்து இருந்தனர். அவ்வகை செயல்கள் தற்போது தேசிய குற்றமாகும்.
.