தற்போதைய கணக்கிடலின்படி அமெரிக்காவில் 2.3 மில்லியன் மக்களே கரோனா தொற்றி உள்ளனர். ஆனால் அமெரிக்காவின் Center for Disease Control (CDC) தலைவர் Dr. Robert Redfield இன்று வியாழக்கிழமை தெரிவித்த கூற்றுப்படி உண்மையில் கரோனா தொற்றியோர் தொகை அங்கு பத்து மடங்கிலும் அதிகம். அதாவது சுமார் 23 மில்லியன் அமெரிக்க மக்கள் கரோனா தொற்றி உள்ளனர்.
.
வழமையாக கரோனாவுக்கான அறிகுறி தெரித்தோர் வைத்திய உதவியை நாடும்பொழுதே அவருக்கு கரோனா தொற்றியதா என்பதை வைத்தியசாலை ஆராயும். அவ்வாறு அடையாளம் காணப்படும் கரோனா தொற்றியோர் தொகையே 2.3 மில்லியன்.
.
ஆனால் அமெரிக்கா முழுவதும் எழுந்தமானமாக இரத்த பரிசோதனை செய்தபோது தமது இரத்தத்தில் கரோனா எதிர்ப்பு சக்தியை கொண்டார் 10 பேருக்கு ஒருவரே உண்மையில் கரோனா நோயாளியாக அடையளாம் காணப்பட்டு உள்ளமை தெரிய வந்துள்ளது. ஏனையோர் கொரோனா தொற்றி, நோக்கான அறிகுறி எதுவும் இன்றிய நிலையில் தமது இரத்தத்தில் கரோனா எதிர்ப்பு சக்தி உருவாக்கப்பட்டு, குணமடைந்து உள்ளனர்.
.
அமெரிக்காவில் இதுவரை 122,370 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
.
உலக அளவில் சுமார் 9.5 மில்லியன் பேர் கரோனா தொற்றி உள்ளனர் (இந்த கணிப்பில் மேல் கூறப்பட்ட அமெரிக்காவின் 20 மில்லியன் கணிப்பு உள்ளடக்கப்படவில்லை). அத்துடன் 483,679 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
.