தெருவுக்கு வந்த அமெரிக்க சட்ட திணைக்கள மோதல்

US_Department_of_Justice

Geoffrey Berman என்பவர் நியூ யார்க் பகுதியின் அரச Attorney. இவரும் ரம்பின் Republican கட்சி ஆதரவாளரே. இவர் பல வழக்குகளை அரசின் சார்பின் கையாண்டு உள்ளார். அதில் ஒன்று சனாதிபதி ரம்பின் குடும்ப சட்டத்தரணி Rudy Giuliani என்பவருக்கு எதிரான வழக்கு. அதனால் விசனம் கொண்ட ரம்ப் Berman ஐ பதவியில் இருந்து துரத்த நீண்ட காலம் முயன்று வந்துள்ளார்.
.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் ரம்ப் ஆதரவு அணியில் உள்ள William Barr என்ற அமெரிக்காவின் Attorney General தனது அறிக்கை ஒன்றில் Berman பதவி விலகுவதாக கூறி இருந்தார். அத்துடன் Berman னின் சேவையை அந்த அறிக்கையில் புகழ்ந்து பாராட்டியும் இருந்தார். (I thank Geoffrey Berman, who is stepping down… tenacity and savvy, Geoff has done an excellent job… achieving many successes … I appreciate his service…” )
.
ஆனால் Attorney General Barr வெளியிட்ட இந்த செய்தி வெளிவந்த உடன் Berman தான் பதவி விலகுவதாக கூறவில்லை என்று Attorney General இன் அறிக்கையை மறுத்து உள்ளார். தான் மேற்படி செய்தியை செய்தி நிறுவனங்கள் மூலமே அறிந்ததாகவும் கூறினார்.
.
Berman விடுத்த மறுப்பு Attorney General லுக்கு அவமானத்தை தோற்றுவித்தது. மறுநாள் சனிக்கிழமை அவர் சனாதிபதி ரம்பின் மூலம் Berman பதவியை பறித்தார். அதனால் முதலில் ‘resignation’ பதவி விலகல் என்று கூறப்பட்டது பின்னர் ‘fired’ என்றாகியது.
.
அதேவேளை சட்ட  அறிஞர்கள் சனாதிபதி தான் நியமிக்கும் (appointed) அதிகாரிகளை மட்டுமே நீக்க முடியும் என்றும், Senate தேர்வு மூலம் பதவிக்கு வருவோர் Senate மூலம் மட்டுமே பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறகின்றனர். அதனால் இவ்விவகாரம் நீதிமன்றம் செல்லும் சாத்தியம் உண்டு.
.