Ukraine-Toronto விமானத்தில் 500 நாய்க்குட்டிகள், 38 பலி

Ukraine_Airlines

யுக்கிரைன் என்ற கிழக்கு ஐரோப்பிய நாட்டின் தலைநகரான Kiev இல் இருந்து கனடாவின் Toronto நகரம் சென்ற விமானத்தில் 500 French bulldog வகை நாய்க்குட்டிகள் (puppies) இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் 38 குடிகள் விமானம் Toronto நகரில் தரை இறங்குவதற்கு முன்னரே மரணித்து உள்ளன.
.
பயணத்தின் முன் பெருமளவு குட்டிகள் Kiev விமான நிலையத்தில் கையாளப்படுவதை அவதானித்த ஒருவர் தனது cell phone வீடியோவில் அதை படம் பிடுத்தும் உள்ளார்.
.
மேற்படி விமானம் Ukraine International Airlines விமான சேவைக்கு சொத்தமானது. விசாரணைகளுக்கு தாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக விமான சேவை கூறியுள்ளது.
.
கனடா போன்ற மேற்கு நாடுகளில் குட்டிகளை விற்பனை செய்யும் நோக்கில் நாய் வளர்ப்பு பண்ணைகள் வைத்திருப்பது கடுமையான விதிமுறைகளை கொண்டது. அதனால் விதிமுறைகள் குறைந்த நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குட்டிகள் எடுத்துவரப்படுகின்றன. குட்டிகளை சட்டபடி இறக்குமதி செய்வது இலகுவான காரியம் அல்ல.
.
சாதாரணமாக விமானங்கள் ஒருசில நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களை மட்டும் காவும் வசதி கொண்டன. ஆனால் கரோனா காரணமாக பயணிகள் பயணிப்பது குறைய, விமானங்கள் பொதிகளை காவி உழைக்க முயல்கின்றன. அவ்வாறே இத்தொகை குட்டிகளும் ஒரு விமானத்தில் வசதிகள் இன்றி பயணித்து உள்ளன.
.
இவ்வகை நாய் குடிகள் ஒவ்வொன்றும் கனடாவில் C$ 3,000 முதல் 4,000 பெறுமதிக்கு விற்பனை செய்யப்படலாம்.
.