நேபாள் போலீசாரின் சூட்டுக்கு ஒரு இந்தியர் பலி

Kalapani
.
சுமார் 30 இந்தியர்கள் நேபாள் உள்ளே 100 மீட்டர் தூரம் வரை நுழைந்த போது நேபாள் போலீசார் அவர்களை தடுக்க முனைந்து உள்ளனர். அப்போது மூண்ட கலவரத்தில் ஒரு இந்தியர் நேபாள் போலீசாரின் சூட்டுக்கு பலியாகி உள்ளார். இந்த சம்பவம் Sarlahi என்ற நேபாளின் தெற்கு பகுதியில் இடம்பெற்று உள்ளது.
.
கடந்த மாதம் Jhapa பகுதியில் சிறு தொகை இந்திய கமக்காரர் நேபாளுள் நுழைய முற்பட்டு இருந்தனர். அப்போதும் நேபாள் போலீசார் துப்பாக்கியால் சுட்டு கமக்காரர்களை விரட்டி இருந்தனர்.
.
சனிக்கிழமை (6/12) நேபாள் தனது புதிய வரைபடத்தை (Map) அந்நாட்டின் கீழ் சபையில் (Lower House) வாக்கெடுப்புக்கு விட உள்ளது. புதிய வரைபடம் நேபாள் கீழ் சபையில் பெரும்பான்மை ஆதரவுடன் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பப்படுகிறது. அதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. புதிய வரைபடம் சர்சைக்குரிய Lipulekh பகுதியை நேபாளின் உரிமை என்கிறது.
.
புதிய வரைபடம் சட்டபடியானால் அது அந்நாட்டின் கல்வி திட்டத்தில் உள்ளடக்கப்படும்.
.
மே மாதம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் நேபாள்-இந்திய எல்லையோரம் உள்ள Lipulekh பகுதியில் ஒரு புதிய 80 km நீள வீதியை திறந்து வைத்ததே நேபாளின் முறுகலுக்கு காரணம். Sugauli Treaty என்ற 1815 ஆம் ஆண்டு உடன்படிக்கையின்படி மேற்படி பகுதியை தனது பகுதி என்கிறது நேபாள்.
.
சீனாவை எதிர்நோக்கும் இந்தியாவுக்கு இப்பகுதி இராணுவ முக்கியத்தும் பெற்றது.
.