இந்திய எல்லைக்கு அருகாக தனது சில ஆயிரம் படையினரை ஞாயிறு அனுப்பி உள்ளது சீனா. சீனாவின் மத்திய மாநிலமான Hubei மாநிலத்தில் இருந்து இந்த படையினர் அடையாளம் குறிப்படப்படாத நிலையம் ஒன்றுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். இந்த படையில் paratroopers உட்பட கவச வாகனங்களும் அடங்கும்.
.
தனது படையை சீனா நகர்தினாலும் இந்திய, சீன ஜெனரல்கள் மத்தியில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் இந்திய-சீன எல்லையோரம், சீனாவின் பக்கத்தில் உள்ள மோல்டோ என்ற இடத்தில் இடம்பெறுகிறது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலையை தனிப்பதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம்.
.
இந்த படை நகர்வு இந்திய பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் வழங்கும் நோக்கம் கொண்டதாகவும், அதேவேளை கரோனாவின் பின்னும் சீனா தயார் நிலையில் உள்ளது என்று அமெரிக்காவுக்கு தெரிவிக்கும் நோக்கம் கொண்டதாகவும் இருக்கலாம்.
.
இரண்டு நாடுகளும் திடமாக குறிப்பிடப்படாத 3,488 km நீள எல்லையை கொண்டுள்ளன. இங்கே அவ்வப்போது இருதரப்பும் சண்டையில் ஈடுபடுவது உண்டு. அண்மையில் ஆயுதங்கள் இன்றி, காய், கால் கொண்டு இரு தரப்பும் சண்டையில் ஈடுபட்டன.
.