கைதியை முழங்காலால் நெரித்து கொலை, போலீசார் கைது

Derek_Chauvin

அமெரிக்காவின் Minnesota மாநிலத்தில் உள்ள Minneapolis என்ற நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கைவிலங்குடன் கட்டுப்பாட்டில் இருந்த 46 வயதுடைய George Floyd என்ற கருப்பு இனத்தவரை Derek Chauvin என்ற வெள்ளை இன போலீசார் தனது முழங்காலால் நெரித்து கொலை செய்துள்ளார். அதனால் அந்த நகரிலும், நியூ யார்க், Denver, Phoenix, Memphis, Columbus ஆகிய பல்வேரு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்கின்றன.
.
Chauvin தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்துக்கு முன்னரே இவருக்கு எதிராக 18 முறைப்பாடுகள் இருந்துள்ளன.
.
Floyd கள்ள நாணயத்தை பயன்படுத்தி கொள்வனவு ஒன்றை செய்ய முனைந்த பொழுதே திங்கள் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.
.
Minneapolis நகரில் ஆர்ப்பாட்டங்கள் மட்டுமன்றி தீவைப்புகள், கொள்ளையடிப்புகள் போன்ற சட்டவிரோதங்களும் நிகழ்கின்றன. ஒரு போலீஸ் நிலையமும் தீக்கு இரையாகி உள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த அந்த மாநில ஆளுநர் 500 National Guard படையினரையும் அழைத்து உள்ளார்.
.
கலவரங்களை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த CNN என்ற செய்தி நிறுவனத்தின் நிருபர், ஒளிபதிப்பாளர், காவலாளி ஆகியோரும் போலீசாரால் கைது செய்யபட்டு பின் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர்.
.