உலகத்தை தாம் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதாக கூறும் நாடுகள் தாம் தமது பயங்கரவாதத்தை லிபியாவுள் திணிப்பதை New York Times பத்திரிகை கட்டுரை ஒன்றில் விபரப்படுத்தி உள்ளது.
.
2011 ஆம் ஆண்டில் அரபு நாடுகள் தமது சர்வாதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தபோது அந்நிய நாடுகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது அடிமை அரசுகளை நிறுவ முனைந்தன. நேட்டோ (NATO) லிபியாவில் இருந்த சர்வாதிகாரி கடாபியை விரட்டி, படுகொலை செய்தது. ஆனால் லிபியா பின்னர் கொலைக்களமாக, நேட்டோ மெல்ல நழுவியது. தற்போது லிபியா அந்நிய நாட்டு கூலிப்படைகளின் களமாகி உள்ளது.
.
ஐ.நா. ஆதரவு கொண்ட Government of National Accord (GNA) அரசின் படைகளுக்கு துருக்கி ஆதரவு வழங்குகிறது. ஆனால் Haftar என்ற முன்னாள் இராணுவ அதிகாரி தலைமையிலான ஆயுத குழுவான Libyan National Army (LNA) க்கு UAE, எகிப்த், ரஷ்யா ஆகிய நாடுகள் உதவுகின்றன.
.
ஆரம்பத்தில் இரண்டு முன்னாள் பிரித்தானிய படையினர் இராணுவ தரம் கொண்ட இரண்டு வள்ளங்களில் Malta வில் இருந்து லிபியாவின் கிழக்கு பகுதிக்கு வந்தனராம். அதேவேளை 6 ஹெலிகள் பொய் ஆவணங்களின் உதவியுடன் Botswana வில் இருந்து கிழக்கு லிபியா வந்தன. மேலும் பல முன்னாள் இராணுவத்தினர் தென்னாபிரிக்கா, பிரித்தானியா, அஸ்ரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து லிபியா செல்லும் நோக்கில் Jordan சென்று கூடினர். LNA சார்பாக போராட இவர்களுக்கு ஆரம்பத்தில் $80 மில்லியன் வழங்கப்பட்டதாம். இவர்களுக்கும் LNA க்கும் முரண்பாடு தோன்ற, இவர்கள் Malta வுக்கு திரும்பி உள்ளனர். இவை அனைத்தும் ஐ.நா. வின் ஆயுத தடை நடைமுறையில் இருக்கையிலேயே இடம்பெற்றன.
.
ரஷ்யாவின் ஆராவுடன் இயங்கும் The Wagner Group என்ற தனியார் ஆயுத படையும் லிபியாவில் LNA சார்பில் இயங்கி வருகிறது.
.
UAE யின் ஆதரவுடன் இயங்கும் குழுக்களுக்கு பிரதான உரிமையாளராக அஸ்ரேலியாவின் வர்த்தகர் Christiaan Durrant உள்ளார். இவருக்கு உடந்தையாக அமெரிக்காவின் Erik Price உள்ளார். Erik Prince சனாதிபதி ரம்புக்கு நெருக்கமானவர்.
.
கடந்த ஜூன் மாதம் Steve Lodge என்ற முன்னாள் தென்னாபிரிக்க யுத்தவிமான விமானியின் தலைமையில் 11 தென்னாபிரிக்க, 5 பிரித்தானிய, 2 அஸ்ரேலிய 1 அமெரிக்க முன்னாள் இராணுவத்தினர் துருக்கியில் இருந்து ஆயுதங்கள் வருவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
.
LNA யின் பயன்பாட்டுக்கு எடுத்துவரப்பட்ட ஹெலிகள், 3 super puma ஹெலிகள் உட்பட, தென்னாபிரிக்காவில் கொள்வனவு செய்யப்பட்டனவாம். அவை அங்கிருந்து Botswana எடுத்துவரப்பட்டன.
.