ஈரான் எண்ணெய் கப்பலை அமெரிக்கா தடுக்கவில்லை

Venezuela

வேனேசுவேலாவுக்கு எண்ணெய் எடுத்துச்சென்ற முதலாவது கப்பலை அமெரிக்கா தடுக்கவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக 5 ஈரானிய கப்பல்கள் ஈரானின் எணெய்யை  வேனேசுவேலாவுக்கு எடுத்து செல்கின்றன. அந்த 5 கப்பல்களில் முதலாவதான Fortune  வேனேசுவேலாவை ஏற்கனவே அடைந்து உள்ளது.
.
Forest, Petunia, Faxon, Clavel ஆகிய ஏனைய 4 கப்பல்களும் வேனேசுவேலாவை நோக்கி பயணிக்கின்றன. இவை காவும் எண்ணெய் வேனேசுவேலாவின் 5 மாத பாவனைக்கு போதுமானது.
.
அமெரிக்கா தனது யுத்த கப்பல்களான USS Detroit, USCG James, USS Tornado உட்பட பெருமளவி கடற்படை வேனேசுவேலாஅருகே நிலைகொள்ள வைத்திருந்தாலும் அவை ஈரானின் எண்ணெய் கப்பலை தடுக்கவில்லை.
.
அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக வேனேசுவேலாவின் inflation 800,000% ஆல் (8,000 மடங்கு) அதிகரித்து உள்ளது. பொருளாதார தடை காலத்தில் சுமார் 4.8 மில்லியன் மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பியோடி  உள்ளனர்.
.