வங்காள விரிகுடாவில் தற்போது நிலைகொண்டுள்ள பாரிய சூறாவளி அம்பன் இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா ஆகிய மாநிலங்களின் கரையோரங்களை வன்மையாக தாக்கலாம் என்ற காரணத்தால் இந்தியா சுமார் 1 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துகிறது. அம்பன் புதன்கிழமை கங்கை ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதியை தாக்கும் என்று வானிலை அவதானிகள் கூறுகின்றனர்.
.
அம்பன் நிலத்தை தாக்கும்பொழுது சுமார் 115 km/h காற்று வீச்சை கொண்டிருக்கும் என்றும் கணிக்கப்படுள்ளது. நடுக்கடலில் தற்போது நகரும் அம்பன் சுமார் 240 km/h காற்று வீச்சை கொண்டுள்ளது.
.
சூறாவளி அம்பன் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் தாக்கும் ஒரு பாரிய சூறாவளி (super-cyclone) ஆகும். 1999 ஆம் ஆண்டு இப்பகுதியை தாக்கிய சூறாவளிக்கு சுமார் 10,000 பேர் பலியாகி இருந்தனர்.
.
மே 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை மீனவர்களை கடலுள் செல்லவேண்டாம் என்று அரசு அறிவித்து உள்ளது.
.
சூறாவளி அம்பன் இந்தியாவை தாக்கிய பின் பங்களாதேசத்தையும் வன்மையாக தாக்கும் என்று கணிக்கப்படுள்ளது. அங்குள்ள தாழ்வான பகுதிகளில் 9 மீட்டர் வெள்ளத்தை அம்பன் உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
.