ஆறு கிழமைகளில் அமெரிக்கா 30.3 மில்லியன் தொழில்களை இழந்தது

USFlag

கடந்த 6 கிழமைகளில் அமெரிக்கா மொத்தம் 30.3 மில்லியன் தொழில்களை இழந்து உள்ளது. அமெரிக்காவின் Department of Labor விடுத்துள்ள அறிக்கையின்படி கடந்த கிழமை மட்டும் 3.8 மில்லியன் ஊழியர்கள் தமது தொழில்களை இழந்து உள்ளனர்.
.
தொழில் இழப்புக்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்க மத்திய, மாநில, நகர அரசுகள் சுமார் 3 டிரில்லியன் பணத்தை வழங்கி இருந்தும் தொழில் இழப்புக்களை தடுக்க முடியவில்லை.
.
ஏப்ரல் மாத முடிவில் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு இன்மை சுமார் 12% ஆக இருக்கும் என்று கணிப்பிடப்படுகிறது.
.
பெரும் தொகையான ஊழியர்கள் தமது தொழில்களை இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு சிலகாலம் வழங்கப்படும் காப்புறுதி பண (unemployment insurance) வழங்கல் நடவடிக்கைகளை செய்ய முடியாது தவிக்கின்றன அரச அலுவலகங்கள்.
.
அதேவேளை அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் பதில் ஒரு மடங்கு சிறிய கனடா மார்ச் மாதம் 1 மில்லியன் தொழில்களை இழந்து உள்ளது. அப்போது அங்கு வேலைவாய்ப்பு இன்மை 7.8% ஆக உயர்ந்து இருந்தது. இந்த மாதம் மேலும் பெரும் தொகை தொழில்களை கனடா இழந்து உள்ளது.
.
ஜெர்மனியில் வேலைவாய்ப்பு இன்மை தற்போது 5.8% ஆக உள்ளது.
.
National Institute of Economic and Social Research கணிப்பு பிரித்தானியா மே மாத முடிவில் 5 முதல் 6 மில்லியன் தொழில்களை இழக்கும் கூறுகிறது.
.