கிருமி கொல்லிகளை உடலுள் செலுத்த ரம்ப் ஆலோசனை

Trump

Detol, Lysol போன்ற கிருமி கொல்லிகளை உடலுள் செலுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று புதியதோர் ஆலோசனையை அமெரிக்க சனாதிபதி வழங்கி உள்ளார் (“I see the disinfectant — where it knocks it out in a minute, one minute. And is there a way we can do something like that, by injection inside or almost a cleaning? “) . அவரின் மூடத்தனமான ஆலோசனையை அமெரிக்க அதிகாரிகள் விரைந்து மறுத்துள்ளனர். அதிகாரிகள் மட்டுமன்றி மேற்படி கிருமி கொல்லிகளை தயாரிக்கும் நிறுவனமும் கூடவே சனாதிபத்தின் ஆலோசனையை பின்பற்ற வேண்டாம் என்று அறிக்கைகைகள் விடுத்துள்ளது.
.
அதுமட்டுமன்றி ‘heat’ அல்லது ‘light’ போன்றவற்றை பயன்படுத்தி கொரோனாவை அழிக்கலாமா என்று ரம்ப் பகிரங்கத்தில் கேட்டபொழுது, அவரின் கொரோனா தடுப்பு குழுவில் அங்கம் வகிக்கும் வைத்தியர் Deborah Birx அவ்வாறு செய்ய முடியாது என்றுள்ளார்.
.
அத்துடன் Washington மாநிலத்தின் Emergency Management Division தனது அறிவிப்பில் “Please don’t eat Tide pods or inject yourself” என்று கூறியுள்ளது. Tide pod ஒரு வகை ஆடைகள் தூய்மையாக்கி.
.
Detol மற்றும் Lysol போன்ற கிருமி கொல்லிகளை தயாரிக்கும் Reckitt Benckise என்ற பிரித்தானிய நிறுவனமும் ” we must be clear that under no circumstance should our disinfectant products be administered into the human body ” என்று அறிவித்து உள்ளது.
.
மறுபுறம் சீனாவை பகிரங்கத்தில் சாடும் ரம்ப், சீனாவின் Bank of China விடம் இருந்து பெரும்தொகை பணத்தை கடனாக பெற்றுள்ளமையும் தெரிய வந்துள்ளது. நியூ யார்க் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் முதலிட ரம்ப் Bank of China என்ற சீன வங்கியிடம் $211 மில்லியன் கடன் பெற்று உள்ளார். இந்த கடன் 2022 ஆம் ஆண்டில் அடைக்கப்படல் வேண்டும்.
.