உலகின் மிக பெரிய கப்பல் சேவை நிறுவனமான Maersk தனது புதிய Triple E வகை கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. Triple E கப்பல் 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் வெற்றுகப்பல் நிறை 60,000 தொன். இதில் 18,000 கொள்கலன்களை எடுத்துச்செல்ல முடியும். இந்த முதலாவது கப்பல் Maersk McKinney Moeller என பெயரிப்பட்டுள்ளது.
இவ்வகையான 20 கப்பல்களை கட்டுமானம் செய்ய தென்கொரியாவின் கப்பல் கட்டுமான நிறுவனமான Daewoo சுமார் US$ 4 பில்லியன்களுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. வழமைபோல் அல்லது இந்த கப்பல்கள் இரண்டு 43,000 hp இயந்திரங்களை (engine and propellers) கொண்டிருக்கும். இதன் வேகம் சுமார் 35 km/h (19 knots). இக்கப்பல் மற்றைய கப்பல்களைவிட சுமார் 37% குறைந்த அளவு எரிபொருள்களையே பயன்படுத்தும். அத்துடன் இதன் CO2 வெளியீடு 50% ஆல் குறைவாகவும் இருக்கும்.
இதன் கடல்மட்டத்துக்கு கீழான பகுதி (draft) 14.5 மீட்டர் ஆழமானதால் இது பனாமா கால்வாயினுடு செல்ல முடியாது. அத்துடன் எந்தெவொரு அமெரிக்க துறைமுகங்களையும் அடைய முடியாது. ஆனால் சுயஸ் (Suez) கால்வாயினுடு செல்லமுடியும். இது பெரும்பாலும் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கு இடையிலேயே சேவையில் ஈடுபடும்.
Triple E: Economy of scale, Energy efficient and Environmentally improved