பல தடவைகள் முனைந்து தோல்வி அடைந்த ஈரான் புதன்கிழமை வெற்றிகரமாக தனது முதலாவது Noor (light) என்ற செய்மதியை ஏவி உள்ளது. இந்த செய்மதியை ஏவ Qased (messenger) என்ற ஏவுகலம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இராணுவத்தின் பயன்பாட்டுக்கான இந்த செய்மதி 425 km உயரத்தில் பூமியை வலம்வரும்.
.
ஈரானின் இந்த ஏவல் மறைமுகமாக நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளை தயாரிக்க அறிவை திரட்டும் முயற்சி என்று குமுறுகிறது அமெரிக்கா. மூர்க்கம் கொண்ட சனாதிபதி ரம்ப் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளை ஈரானின் படைகள் சீண்டினால் உடனடியாக அவற்றை அழிக்குமாறு கூறியுள்ளார்.
.
ஒபாமா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, சீனா ஆகிய பகுதிகள் கூட்டாக ஈரானுடன் 2015 ஆம் ஆண்டு செய்து கொண்ட அணு பயன்பாடு ஒப்பந்தம் ஒன்றில் இருந்து ரம்ப் 2018 ஆண்டு வெளியேறி, பின் ஈரானை தன்னுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்யுமாறு கூறியிருந்தார். ஆனால் ஈரான் இன்றுவரை ரம்புடன் தொடர்புகளை ஏற்படுத்தவில்லை.
.
ரம்ப் தான் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, ஈரான் மீது கடுமையான தடைகளை விதித்திருந்தாலும், ஈரான் தொடர்ந்தும் மேற்படி 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்துக்கு இணங்க செயல்படவேண்டும் என்று கருதுகிறார்.
.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஈரான் IMF இந்த உதவிகளை நாடியபொழுது அமெரிக்கா அதை எதிர்த்து உதவிகளை தடை செய்திருந்தது.
.