கொரோனா வைரஸ் வூஹான் பரிசோதனை கூடத்தில் உருவானதா?

WIV

கொரோனா வைரஸ் வூஹானில் உள்ள உயிரியல் பரிசோதனை கூடம் ஒன்றில் சீனர்களால் உருவாக்கப்பட்டது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. குறிப்பாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சியினர் இந்த கருத்தை மறைமுகமாக பரவி வரும் கொரோனாவுடன் இணைக்க அண்மைக்காலங்களில் முயல்கின்றனர்.
.
ரம்ப்  குறிப்பிடும் Wuhan Institute of Virology (WIV) என்ற ஆய்வு நிலையம் ஒரு இராணுவ உயிரியல் ஆய்வு நிலையம் அல்ல. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையம் கிருமிகளை ஆராய்ந்து நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க உதவும் வைத்திய துறை நிலையம். அத்துடன் இந்த நிலையம் அமெரிக்காவின் நோய் எதிர்ப்பு ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபடுவதுண்டு. இந்த நிலையத்துக்கு அமெரிக்க அமைப்புகள் நிதி உதவிகளும் வழங்கி வந்துள்ளன.
.
உலகின் உயிரியல் கிருமிகளை ஆய்வுகளை செய்யும் பரிசோதனை கூடங்கள் (laboratories) 4 வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. Bio Safety Level 1 (BSL-1) வகை கூடங்கள் சாதாரண, ஆபத்து இல்லாத கிருமிகளை ஆய்வு செய்பவை. BSL-4 வகை கூடங்கள் ஆபத்தான SARS, ebola, corona வைரஸ் போன்றவற்றை ஆய்வு செய்யும் கூடங்கள். உலகி சுமார் 50 BSL-4 வகை ஆய்வு கூடங்கள் உண்டு. வூஹானில் உள்ள WIV கூடமும் அதில் ஒன்று. BSL-4 வகை ஆய்வு கூடங்கள் சர்வதேச விதிகளுக்கு இணங்க இயங்குவன.
.
மார்ச் மாதம் வெளியாகிய அமெரிக்காவின் ஆய்வு அமைப்பான Scripps Research கொரோனா வைரஸ் இயற்கையாக உருவான ஒன்று, மனிதரால் உருவாக்கப்பட்டது அல்ல என்று கூறி இருந்தது. அந்த ஆய்வாளர்களில் ஒருவரான Kristian Andersen என்பவர் “By comparing the available genome sequence data for known corononavirus strain, we can firmly determine that SARS-CoV-2 originated through natural process” என்று கூறியிருந்தார்.
.
வூஹானில் உள்ள WIV ஆய்வு கூடத்தில் வௌவாலில் உள்ள கொரோனா வைரஸை ஆய்வு செய்யப்பட்டு இருந்தாலும் காட்டு மிருகங்களை விற்பனை செய்யும் வூஹான் சந்தையில் காணப்பட்ட கொரோனா வைரஸ் வேறுபட்டது என்கிறது மேற்படி ஆய்வு.
.