தன் தவறுகளை மற்றவரில் திணிக்கும் ரம்ப், WHO உட்பட

Trump

தனது பொதுவாழ்வு முழுவதும் தனது தவறுகளை மற்றவர்களின் தலையில் சுமத்தி தப்பித்துக்கொள்ளும் இயல்பு கொண்ட அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான தனது தவறுகளை ஐ.நா.வின் சுகாதார அமைப்பான WHO மீது திணிக்க முயல்கிறார்.
.
சீனா கொரோனா வைரஸ் தொடர்பான ஆபத்துகளை முதலில் முழுமையாக வெளியிடவில்லை என்றும், WHO அதற்கு ஆதரவாக இருந்துள்ளது என்றும் ரம்ப் கூறி உள்ளார். அதனால் WHO அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியையும் நிறுத்த பணித்துள்ளார்.
.
ஆனால் ரம்ப் கொரோனா, சீனா தொடர்பாக முன்னர் கூறியவை அவரின் பின் கூற்றுக்கு முரணானவை.
.
ஜனவரி 24 ஆம் திகதி ரம்ப் “சீனா கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையாக உழைக்கிறது. அமெரிக்கா சீனாவின் கடுமையா உழைப்புக்கும், வெளிப்படையான அணுகுமுறைக்கும் நன்றியாக உள்ளது. குறிப்பாக அமெரிக்க மக்கள் சார்பில் நான் சனாதிபதி சீக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறி இருந்தார் (China has been working very hard to contain the Coronavirus. The United States greatly appreciate their efforts and transparency. In pparticular, on behalf of the American people, I want thank President Xi!).  அனால் ரம்ப் இப்போது சீனா மீதி வசை பாடுகிறார்.
.
தானே முதலில் சீனாவில் இருந்தன பயணங்களுக்கு தடை விதித்ததாகவும் ரம்ப் கூறி வருகிறார். உண்மையில் ரம்புக்கு முன் 38 நாடுகள் கொரோனா காரணமாக பலவகை தடைகளை சீனா மீது விதித்து இருந்தன. உண்மையை விளக்கிய பின்னும் ரம்ப் தொடர்ந்தும் தனது தவறான கூற்றை கூறி வருகிறார்.
.
ஒபாமா காலத்து நோய்களை பரிசோதனை செய்யும் முறை முற்றாக தவறு என்றும் தனது ஆட்சியே மீண்டும் தரமான புதிய பரிசோதனை கட்டமைப்புகள் ஆரம்பித்தாகவும் ரம்ப் கூறி உள்ளார். ஆனால் அதற்கு Kent State University epidemiology பேராசிரியர் Tara Simth “He is lying. He is lying 100%” என்று கூறியுள்ளார்.
.
ரம்ப்  தனது மகள் Inavka வுடன் இணைந்து அமெரிக்க வங்கியாளர்களுடன் பேசும்போது தனது மகள் 15 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருந்தார் (She created over 15 million jobs) என்று கூறியிருந்தார். உண்மையில் ரம்பின் 3 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்காவில் அனைத்து நிறுவனங்களாலும் உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகள் அத்தொகையின் அரைப்பங்கும் அல்ல. சில அமெரிக்க நிறுவங்கள் வருங்காலத்தில் 14 மில்லியன் (ஊதியம் வழங்காத) தொழில் பயிச்சிகளை வழங்கும் என்று கூறியதையே ரம்ப் ஊதியம் வழங்கும் வேலைகள் என்று திரித்து இருந்தார்.
.
ஆனாலும் ரம்பின் விசுவாசிகள் தொடர்ந்தும் அவரின் கூற்றுகளை நம்புவதால், அவரும் தொடர்ந்தும் அவற்றை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
.